தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்து பொறியியல் பிரிவை அகற்றுவது மறு சீரலனை செய்யப் பட வேண்டும் அத்துடன் இச் செய்கை கண்டிக்கத் தக்க விடயம் எனவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் .
தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்து பொறியியல் பிரிவை அகற்றுவதுக்கான காரண காரியத்தை அடையாளம் காணப்பட்டு அதை நிவர்த்தி செய்யப் பட வேண்டுமே யொழிய அதை அகற்றுவது தல்ல
அரசாங்கம் கல்விக்காக பெரும் தொகையானா பணத்தை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கி இருக்கும் போது நடை முறையில் உள்ள துறையை மேன் படுத்துவதை விட்டு விட்டு அதை அப்புறப் படுத்துவது தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி நிலையை பாதிப்பதாகவே அமையும்.
ஆகையால் இதில் சம்மந்தப் பட்ட சகல அதிகாரிகளும் இம் முயற்சியை தடுத்து நிறுத்தி தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பிரிவு மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய முயற்சியில் இறங்க வேண்டும் எனவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கேட்டுக் கொண்டார்