உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முன்னோடி ஊடக செயலமர்வு!

 

 

எம்.வை.அமீர் எம்.ஐ.சம்சுதீன்

 

எதிர்வரும் 2015-12-01  உலக எய்ட்ஸ் தின தேசிய நிகழ்வுகளை, கிழக்குமாகாண மட்டக்களப்பில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் நிகழ்வின் ஒரு அங்கமான ஊடகவியலாளர்களுடனான செயலமர்வு 2015-11-28 ல் கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் அத்தியட்சகர் டாக்டர் கே.முருகானந்தம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹரிஸ் அவர்களது வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக SACP மக்கள் நல ஆலோசகர் டாக்டர் சத்யா ஹேரத் அவர்கள் கலந்து கொண்டு AIDS மற்றும் HIV தொடர்பில் சொற்போளிவாற்றினார்.

2015 ம் ஆண்டுக்கான எய்ட்ஸ் தின தொனிப்பொருளாக ‘Test today’ என்ற வாசகம் கொள்ளப்பட்டுள்ளதாகவும், 

“செய்வோம் செய்வோம் HIV பரிசோதனை செய்வோம் 

காண்போம் காண்போம் HIV இனம் காண்போம் 

வெல்வோம் வெல்வோம் AIDS வெல்வோம் 

வாழ்வோம் வாழ்வோம் சுகமாய் வாழ்வோம்“  எனும் கோஷங்களுடன் உலக எய்ட்ஸ் தினத்தைத்தை அனுஷ்ட்டிக்கவுள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கையில் 3000-5000 வரை HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என யூகிப்பதாகவும் இதுவரை 2241பேர்  HIVபாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் HIV இன்னும் எங்களுடன் எனும் நினைவில் ஒவ்வொருவரும் அதற்க்கான பரிசோதனையை செய்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்றும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

எதிர்வரும் 2015-12-01  ல் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள தேசிய நிகழ்வில் இலவச பரிசோதனை மற்றும் இலவச ஆணுறைகள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாகவும் காந்தி பாக் அருகில் ஆரம்பிக்கும் ஊர்வலம் மாநகர பொது மண்டபத்தில் முடிவுற்று நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் ஏற்பட்டுள்ள நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் வேண்டப்பட்டது.

நிகழ்வுக்கு பிராந்திய வைத்திய உயர் அதிகாரிகள் மற்றும் கிழக்குமாகாண ஊடகவியலாளர்கள் என பெரும்திரளானோர் பங்குபற்றி இருந்தனர்.

0_Fotor_Collage_Fotor 0_Fotor_Collage b_Fotor