சாய்ந்தமருது பைத்துல் ஸகாத் விநியோகம் !

 

எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்

சாய்ந்தமருது பைத்துல் ஸகாத் நிதியம் இவ்வருடம் தங்களுக்கு கிடைத்த நிதி உள்ளிட்ட பொருட்களை 2015-11-28 அன்று சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வைத்து பயனாளிகளுக்கு பிரித்து வழங்கி வைத்தது.

சாய்ந்தமருது பைத்துல் ஸகாத் நிதியத்தின் தலைவர் யூ.எல்.எம்.காசீம் மௌலவி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் பெறப்பட்ட ஸகாத் நிதி மற்றும் பொருள்களின் மொத்த மதிப்பு 3231641.61 ஆனா நிதி உள்ளிட்ட பொருட்கள் இவற்றை பெறுவதற்கு தகுதியான 76பேருக்கு அவர்களது தேவையை முன்னிறுத்தி பிரித்துக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  சாய்ந்தமருது பைத்துல் ஸகாத் நிதியத்தின் செயலாளர் யூ.எல்.எம்.ஜௌபர், பொருளாளர் எம்.ஐ.எம்.நிபாயிஸ் உப பொருளாளர் ஏ.சீ.சமால்டீன் மற்றும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் செயலாளர் ஏ.எல்.மஜீத் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இம்மக்களுக்கு வழங்குவதற்காக மனமுவந்து உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3_Fotor 5_Fotor 7-2_Fotor 4-3_Fotor