ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர்கொழும்பு, கந்தவல பகுதியிலுள்ள கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளது.
அளவை நடவடிக்கைகளுக்காக இந்த கோபுரம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒல்லாந்தர் கோபுரம் உடைந்து வீழ்ந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரத்தை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.