மட்டக்களப்பு மாவட்ட அ. இ. சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டம் !

அசாஹீம் 

 

இலங்கையில் இருபதாயிரம் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சிறந்த தொழிற் சங்கமாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கம் இருக்கின்றது என அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான ஜகத்குமார சுமித்திர ஆராய்ச்சி தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டம் நேற்று (26.11.2015) ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

எமது தொழிற் சங்கத்திற்கு நீலம் பச்சை சிவப்பு என்ற வேறுபாடு கிடையாது எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அந்த அரசாங்கத்துடன் பேசி எமது உத்தியோகத்தர்களின் நலனுக்காகவும் அவர்களின் தொழில் சார் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் பாடுபட்டு வருகின்றோம்.

இப்போது இந்த அரசாங்கத்திலுள்ள சமுர்த்தி திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா அவர்களுடன் எமது தொழிற் சங்கம் பேசி பல் வேறு விடயங்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பி.குணரெட்னம் மற்றும் சஙகத்தின் பொருளாளார் எம்.அன்வர், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எல்.ஐயூப்கான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

DSCN3732_Fotor_Collage_Fotor