அஸ்ரப் ஏ சமத்
மா்ஹம் கலாநிதி ஏ.எம்.ஏ. அசீஸ் அவா்களின் வருடாந்த ஞாபகாா்த்த சொற்பொழிவு நேற்று (26) வெள்ளவத்தை எக்சலன்சி ஹோட்டலில் காலித் எம். பாருக் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வை அசீஸ் பவுண்டேசனும் மற்றும் வை.எம்.எம். ஏ அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வில் பிரதம பேச்சாளாராக பேராசிரியா் எம்.எஸ்.எம் அனஸ் Muslim Modernism and Reformative Process in the field of Education a Sri Lanka Experience ” என்ற தலைப்பில் உரையாற்றினாா்.
இந் நிகழ்வில் அசீஸ் பவுன்டேசன் உறுப்பிணா் பி. பாலசிங்கம், வை.எம்.எம்.ஏ தலைவா் சாதீக் எம். சலீம், பொறியியலாளா் ஏ.ஜி.ஏ. பாரி ஆகியோறும் உரையாற்றினாா்
இஸ்லாமிக் பேங்கிங் நுால் ஏ. ஜ. மரிக்காா் அவா்கள் கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காா, மற்றும் கலாநிதி அசீஸின் மகன் அலி அசீஸ் ஆகியோா் அசீஸ் பற்றிய நுால்களை பிரதம அதிதிகளுக்கு கையளித்தனா்.