புதிதாக கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் நூற்றுக்கு 90 வீதத்தில் இருந்து 70 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வோர் 30 வீத பணத்தை கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 70 வீதமாக இருந்த லீசிங் வசதி 90 வீதம் வரை அண்மையில் அதிகரிக்கப்ட்டது.