மட்டு.போதனா வைத்தியசாலையில் 100 பேருக்கு கட்ரக் சத்திரசிகிக்சை !

ஜவ்பர்கான்

சுகாதார அமைச்சினால் நாளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பமாகவுள்ள 330 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஓளிக்கான பாதயாத்திரையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 100 வறுமைக் கோடடின்கீழ் வாழும் கண்பார்வை குறைந்தவர்களுக்கு இலவச கட்ரக் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

S2920033_Fotor

இதற்கென ஜோன் கீல்ஸ் நிறுவனம் சுமார் 40 இலட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளது.ஒருவருக்கு இச்சத்திர சிகிச்சையை தனியார் மருத்துவ மனைகளில் மேற்கொள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவிடவேண்டியுள்ளது.
சத்திர சிகிச்சை ஆரம்ப வைபவம் கைத்தியசபலையின் பிரதி பணிப்பாளர் திருமதி கிறேசி தலைமையில் நடைபெற்றது.பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணியக அதிகாரி டாக்டர் என்.நவலோஜிதன் கண்சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏக.டயஸ் உட்பட வைத்தியதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் சுகாதார அமைச்சு அதிகாரிகள் உட்ப்ட பலரும் கலந்து கொண்டனர்.

S2920037_Fotor
ஒளிக்கான பாதயாத்திரை நாளை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமாகி 17 நாட்கள் நடைபவனியாக கொழும்பை சென்றடையவுள்ளது.
சகருக்கும் கண்பர்வையை வழங்குவதே இப்பாதயாத்திரையின் நோக்கமாகும்.

 

S2920036_Fotor

S2920041_Fotor