தரமிழந்த நிலத்தை புனரமைப்புச் செய்யும் திட்டம் அங்குரார்ப்பனம் !

ஹாசிப் யாஸீன்

 

 பயிர்ச் செய்கைக்கு பயன்படாமல் காணப்படும் காணிகளை வளப்படுத்தி அதில் பயிர்ச் செய்கையினைமேற்கொள்ளும் வேலைத்திட்டத்தினை காணி உபயோகத் திட்டமிடல் திணைக்களம் நாடளாவிய ரீதியில்நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தரமிழந்த நிலத்தை புனரமைப்புச் செய்யும் திட்டத்தின் கீழ்சாய்ந்தமருது கமநலச் சேவைக் காரியாலய வளாக நிலத்தினை வளப்படுத்தி அதில் மரநடும் மாவட்ட நிகழ்வுநேற்று (24) இடம்பெற்றது.

4_Fotor

அம்பாறை மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகமும், சாய்ந்தமருது பிரதேச செயலகமும்இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்டகாணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.நஜீப், சாய்ந்தமருது கமநல சேவைகள்அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.சம்சுதீன், மாவட்ட விவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.ஜெமீல், காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஸாஹிர், காணிப் பயன்பாடு அபிவிருத்திஉத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அனஸ் உள்ளிட்ட விவசாய உத்தியோகத்தர், வட்ட விதாணைமார் என பலரும்கலந்து கொண்டனர்.

இதன்போது வளப்படுத்திய சாய்ந்தமருது கமநலச் சேவைக் காரியாலய வளாக காணியில் அதிதிகளினால்பயன்தரும் பழ வகை மரங்கள் நடப்பட்டதுடன் அதற்கான நீர் விநியோகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.