தமிழ் மக்களின் மனங்களில் இருந்த பயம் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது : சமந்த பவர் !

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

samantha

மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான 6 வருட காலப்பகுதியில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயினும் விஷேடமாக வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், காணாமல் போனவர்களை கண்டறிதல் மற்றும் தடை செய்யப்பட்டிருந்த சில தமிழ் இயக்கங்களின் தடை நீக்கப்பட்டமை போன்ற அரசின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கம் மேற்கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் தமிழ் மக்களின் மனங்களில் இருந்த பயம் இல்லாதொழிக்கப்ட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.