அபு அலா –
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு சனிக்கிழமை (21) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று இலங்கை வங்கிக் கிளையின் ஓய்பெற்ற முன்னாள் முகாமையாளர் ஏ.பி.ஏ.கபூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த நிவாரனப் பொருட்களை வழங்கி வைத்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிக வரிய 100 குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பின்தங்கிய கிராமமான ஆளங்குலம், சம்பு நகர், மீலாத் நகர், மீனோடைக்கட்டு கிராமத்தில் வசிக்கும் 102 வரிய கும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு நிவாரனப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.