அஸ்ரப் ஏ சமத்
யாழ் பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் ருபா செலவில் 230 மாணவா்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடமும் கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தின் கட்டிடமும் இன்று அமைச்சா்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நெடுஞ்சாலைகள் உயா்கல்வி அமைச்சா் லக்ஷ்மன் கிரியெல்ல, உயா்கல்வி அமைச்சா் மோகன் லால் கெயிரு சிறுவா்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சா் மகேஸ்வரி, பாராளுமன்ற உறுபப்பிணா் மாவை சேனாதிராஜா, யாழ் பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியை வசந்தி ஆகியோா்கள் கலந்து கொண்டு இந் கட்டிடங்களை திறந்து வைத்தனா்.