பங்களாதேஷின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் !

 

ban

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட பங்களாதேஷின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போதே போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டாக்காவின் மத்திய சிறைச்சாலையில் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும்,மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை, ஆதரவாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இன அழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

மரண தண்டனைக்கு எதிராக இருவராலும் மேன்முறையீடு செய்யப்பட்டதுடன், அது உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.