ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூது வர் சமந்தா பவர் இலங்கை வந்தடைந்தார் !

ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூது வர் சமந்தா பவர் இன்று பிற்பகல் இலங்­கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.   

samantha

டெல்லியில் இருந்து இலங்கைக்கு வந்த இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான யுஐ 281 என்ற விமானத்தில் 8 பிரதிநிதிகளுடன் வருகைத் தந்தார்.

சமந்தா பவர் நாளை நண்பகல் கொழும்பில் அமைந்துள்ள அமெ­ரிக்க தூது­வரின் இல்­லத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் முக்­ கிய பேச்­சு­வார்த்­தை­யொன்றில் கலந்­து­கொள்­ள­வுள்ளார்.

 

இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அப்துல் கெசாப் உள்­ளிட்ட முக்­கிய அதி­கா­ரி­களும் கலந்து கொள்­ள­வுள்­ள­தோடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்
க­ல­நாதன், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா, புளொட்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரோஷ்­பி­ரே­மச்­சந்­திரன், கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் இந்த சந்­திப்பில் பங்­கேற்­க­வுள்­ளனர்.
 

 

இலங்­கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூதுவர் சமந்தா பவர் நாளை வடக்­கிற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். இதன்­போது வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வ­ரனை சந்­திக்­க­வுள்­ள­தோடு மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டோர், உள்ளுர் அர­சாங்க அதி­கா­ரிகள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். அத்­துடன் ஒஸ்­மா­னியா கல்­லூ­ரியின் புதிய கட்­டிட திறப்பு விழா­விலும் கலந்­து­கொள்ளும் இவர் யாழ்ப்­பாண நூல­கத்­திற்கும் உத்­தி­யோக பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.
 

 

அத­னைத்­தொ­டர்ந்து திங்­கட்­கி­ழ­மை­யன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளிவ­வி­வ­கார அமைச்சர் மங்­க­ள­ச­ம­ர­வீர உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளையும் சமந்தா பவர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

 

அண்­மைய நாட்­க­ளாக ஆசிய நாடு­க­ளு­கான விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருக்கும் ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூதுவர் சமந்தா பவர் இந்த இலங்கை விஜ­யத்­தின்­போது இங்கு நான்கு நாட்கள் தங்­கி­யி­ருக்­க­வுள்ளார். இத்­த­ரு­ணத்தில் இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவை வலுப்­ப­டுத்த அமெ­ரிக்கா கொண்­டி­ருக்கும் ஈடுபாடு தொடர்பாக வலியுறுத்தவுள்ளதோடு, சமாதானம், பொறுப்புகூறுதல், நல்லிணக்கம் ஆகிய முயற்சிகளுக்கான அமெரிக்காவின் ஆதவை வெளிப்படுத்தும் வகையில் அரச உயரதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூகக் குழுக்கள், இளைஞர்கள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பித்தக்கது.