BCAS Campus வருடாந்த பட்டமளிப்பு விழா- 2015 !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான BCAS Campus இன் வருடாந்த பட்டமளிப்பு விழா கடந்த11.11.2015 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில், Quantity Surveying, Civil Engineering, Computing, Law, Bio Medical Sciences, Business Management ஆகியதுறைகளில் உயர் தேசிய டிப்ளோமாக்களை பூர்த்தி செய்த 443 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

01_Fotor
அத்தோடு Quantity Surveying (QS) துறையில் London South Bank பல்கலைக் கழகம் வழங்கும் BSc(Hons) பட்டங்களைப் பெற்றுக் கொண்ட 75 மாணவர்களுக்கான இளமானிப்பட்டங்களும், விசேட விருதுகளும் இப்பட்டமளிப்பு விழாவின்போது வழங்கிவைக்கப்பட்டன.

 

இந்நிகழ்வில் பல்கலைக் கழக விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ மோகன்லால் கிரேரா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு London South Bank பலலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்டேவிட்பீனிக்ஸ் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.

07_Fotor_Collage_Fotor

மேலும், Edexel, UK இன் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் திருமதி பிரமிளா போள்ராஜ் அவர்களும் London South Bank பல்கலைக்கழகத்தின் உப தலைவர் பேராசிரியர் ராவ் அவர்களும் அதேபோன்று BCAS Campus தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் அதனுடைய தலைமைப் பீடாதிபதி பேராசிரியர் சானிகா ஹிரும்புரேகம அவர்களும் இன்னும் பல பிரமுகர்களும் இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

தனியார் உயர் கல்வித்துறையில் 16 வருட சிறப்பு அனுபவத்தைக் கொண்டுள்ள BCAS Campus, Quantity Surveying, Civil Engineering, Computing, Law, BioMedical Sciences, Business Management , Bio Technology , Telecommunication Engineering மற்றும் Electronics/Electrical Engineering ஆகிய துறைகளில் உயர்தேசியடிப்ளமோ (HNDs) மற்றும் பட்டப்படிப்பு (Top Up Degrees) அத்துடன்முதுமானி (Masters) ஆகிய தரத்திலான பாடநெறிகளைஇலங்கையில் வழங்கி வருகிறது.

 

இலங்கையின்தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக நன்மதிப்பைப் பெற்றுள்ள BCAS Campus கொழும்பு, கல்கிஸ்ஸை, கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய நகரங்களில் வளாகங்களையும், துணை வளாகங்களையும் கொண்டிருப்பதோடு கட்டாரில் ஒரு கற்கை நிலையத்தையும் கொண்டுள்ளது.

 

பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்ளான University of Wolverhampton , London South Bank University என்பவற்றுடனும், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்படும் தகைமைகளைவழங்குகின்ற நிறுவனமான Edexel UK உடனும்உறுதியான இணைப்பைக் கொண்டுள்ள BCAS Campus இதுவரை பல்லாயிரக்கணக்கான இலங்கைமாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.