பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்திற்கு விஜயம்!

எஸ்.எம்.அறூஸ்
ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று காலை களவிஜயத்தை மேற்கொண்டார்.
பிரதி அமைச்சருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே.ரொபின் கோடிஸவரன், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருவன் சந்திர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் கொடமுன, பிரதம பொறியியலாளர் ரணசிங்க மற்றும் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் இக்களவிஜயத்தில் இணைந்து கொண்டனர்.
12233166_1081642191860001_1784304335_n_Fotor
விளையாட்டு கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது.
இந்தக்குறைபாடுகளை கண்டறிந்து கொண்ட பிரதி அமைச்சரும்,அமைச்சின் அதிகாரிகளும் இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக இங்கு தெரிவித்தனர்.
அம்பாரை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக தமிழ்,முஸ்லிம் பிரதேசங்களின் உள்ள விளையாட்டு மைதானங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 12226267_1081620541862166_1178584586_n_Fotor