முஹம்மட் றின்ஸாத்
மிக நீண்ட நாளாக அவதானிக்கப்பட்ட பிரச்சினைகளின் மிக முக்கியமான பிரச்சினைதான் கல்முனை நுாராணியா மையவாடி ஒளி விளக்கு பழுதடைந்து இரவு நேரத்தில் இருளாக காணப்படுகின்ற பிரச்சினை..
கடந்த பல நாட்களாக இவ் மையவாடி இரவு நேரங்களில் ஒளி விளக்குகள் ஒளிராமல் இருள் நிரம்பியதாகவே காணப்படுகிறது, என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மையவாடி இருள் நிரம்பியதாக காணப்படுவதனால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர்.
இப்பிரச்சினை பற்றி அப்பிரதேசவாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் :
கடந்த பல நாட்களாக இந்த மையவாடியில் உள்ள ஒளி விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன அதனை திருத்துவதர்க்கு யாரும் முன்வரவில்லை இதனால் நாங்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது உதாரணமாக இரவு நேரங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டிய கட்டம் வந்தால் மையவாடியில் ஒளி விளக்குகள் பழுதடைந்த காரணத்தால் விளக்குகள் மற்றும் touch லைட் போன்றவற்றை பயன்படுத்திய மையத்துக்களை அடக்கம் செய்ய வேண்டிய கட்டம் ஏற்படுகின்றது..
அது மாத்திரம் அல்ல மையவாடிக்கு அருகில் பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது இரவு தொழுகைக்கு நாங்கள் செல்லும் போது இந்த மையவாடி இருளாக இருப்பதோடு அதன் பாதையும் மிக இருளாக இருக்கிறது . இதனால் எங்களுக்கு மிக கஷ்டமாக உள்ளது தயவு செய்து உரியவர்கள் இந்த பிரச்சினையை உடனடியாக கருத்தில் கொண்டு மையவாடி ஒளிவிளக்குகளை திருத்தி தருமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.
உண்மையில் இப்படியான பிரச்சினைகள் உடன் தீர்த்து வைக்கப்பட வேண்டியவைகள் என்பதனை உரியவர்கள் உணர்ந்து உடனடியாக இப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் ..
அதனோடு மேலும் மேலும் இப்பிரச்சினை ஏற்படாவண்ணம் மையவாடி ஒளிவிளக்கை பாதுகாக்க பாதுகாப்பு கம்பி பெட்டிகளை அமைத்தால் நன்றாக இருக்கும் எனவும் மக்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.