முஸ்லிம்கள் தமிழர்களிடத்திலிருந்தே அரசியலைக் கற்றனர் : அமீர் அலி !

ஜவ்பர்கான்
முஸ்லிம்கள் தமிழர்களிடத்திலிருந்தே அரசியலைக்கற்றனர்.ஆனால் முஸ்லிம் பிரதேசங்களை பாருங்கள் தமக்கு தேவையான அனைத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைமைகளுக்கு அழுத்தததைக் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர்.ஆனால் தமிழ் மக்கள் பேசிப்பேசியே இன்னும் இந்த இடத்திலேலேயே நிற்கின்றனர். இவ்வளவு காலம் பேசியும் எல்லாமே பூஜ்ஜியத்திலேயே முற்றுப்பெற்றிருக்கிறது. இவ்வாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

SAM_0222_Fotor
கிராமிய பொருளதாதார அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட வாவி மீனவர் தங்குமடக்கட்டிடத்திறப்பு விழா வைபவம் செட்டிப்பாளையத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.ர்
தங்கராசா விந்தியன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SAM_0235_Fotor
தொடர்ந்து பேசிய அவர் இனிமேல் இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் சிங்களவர் என்ற பேதங்களுக்கு இடமில்லை.இவ்வாறானதொரு நிலையில் நின்றுதான் நாம் அரசியலைச் செய்யப்போகின்றோhம்.என்றார்.

SAM_0239_Fotor