கிழக்கில் பெய்து வரும் அடைமழை காரணாமாக பொருட்களின் விலை அதிகரிப்பு !

 

பி.எம்.எம்.எ.காதர்

 

கிழக்கில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தோண்றியுள்ளது.இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு காணப்படுகின்றன அடைமழை தொடருமாயின் தாழ்ந்த பிரதேசங்களில் வாழம் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் தோண்றுகின்றது.

1-PMMA CADER-29-10-2015_Fotor

மருதமுனைப் பிரதேசத்தில் பிரன்ஞ்சிட்டி வீட்டுடத் திட்டம்,65 மீட்டர் வீட்டுத் திட்டம்,நளீர் புரம்; ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இந்த அடை மழை காரணமாக பொருட்களின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது கடல் மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

 இந்த அடைமழை நிலவரம் தொடர்பில் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி,தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வினவினேன் இதுவரை மக்கள் பாதிக்கப்பட்ட முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லையென்றும் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.