மண்ணும் மனிதனும் !

unnamed

 

எத்தனை முறை
கூட்டினாலும்
திரும்பத் திரும்ப
வந்து சேரும்
மண்..

 

செருப்புக்
காந்தத்தில் ஒட்டி
படிக்கட்டின்
கால் தட்டியில்
கண்ணயரும்
மண்..

 

எண்ணிக்கையில்லாத
இந்த மண்..
இல்லத்தரசிகளின்
எரிச்சலைக் கிளப்பும்
மண்…

 

இம் மண்ணுக்கெல்லாம்
இங்கிருந்து
அங்கிருந்து கூட்டுகிற
தும்புக் கட்டு
செம பகைவன்…

 

மழைக் காலத்தில்
வீட்டுக்குள் நுழைய வலிய
மல்லுக்கு நிற்கும் பெரு
மண்…

 

பூனையாய்
திரும்பத் திரும்பச்
சுற்றி வந்து
காலை நக்கும்
மண்…

 

மண்ணோடு
எவனுக்கும்
இரக்கமில்லை..
ஆனாலும் 
அந்த மண் துண்டை
வாங்க வீடு கட்ட
எவனும்
சளைப்பதுமில்லை..

 

இவ்வாறு
மண்ணோடு
பிரியம் வைத்து..
மண்ணோடு
கோபிக்கும்
மனிதன்
இறுதியில்
மண்ணாகிப் போவான்..

 

அப்போது
மனிதன் மண்..

 

இப்போதும்
மனிதன்
மண்தானே…
காத்தான்குடி-ஏ.எச்.எம்.ஜிஹார்