கராத்தே வீரர் படுகொலை : 08 சந்தேக நபர்கள் கைது !

wasantha-soysa

 கின்னஸ் சாதனை வீரரும் இரவு விடுதி உரிமையாளருமான வசந்த சொய்ஸாவின் கொலை தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த கொலையை திட்டம் தீட்டிய இருவரில் ஒருவரும் கைதானவர்களில் அடங்குவதுடன் கொலையுடன் தொடர்புள்ள மேலும் 15 பேரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

கின்னஸ் சாதனை வீரர் வசந்த சொய்ஸா அநுராதபுரம் ‘கடபணஹ’ பகுதியிலுள்ள அவரது சொந்த இரவு விடுதியில் வைத்து கடந்த 24 ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முக மூடியணிந்து வந்த கும்பல் இவரை கூரிய ஆயுதங் களினாலும் தடிகள்,

 

பொல்லுகள் என்பவற்றினாலும் தாக்கி கொலை செய்ததோடு இரவு விடுதியையும் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர்.

 

இந்த கொலை தொடர்பில் கைதான கொலையை திட்டம் தீட்டிய நபரும் இதே பிரதேசத்தில் உள்ள இரவு விடுதியொன்றின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரால் தேடப்பட்டு வரும் கொலையை திட்டம் தீட்டிய அடுத்த நபரும் அநுராதபுரம் பிரதேச இரவு விடுதி உரிமையாளர் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களிடையே இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவரும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

 

கைதான சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஆட்டோ, தடிகள், இரும்பு பொல்லு, வாள் என்ப னவும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். முகமூடி சந்தேக நபர்கள் அணிந்து வந்த உடைகள் என்பனவும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

கொல்லப்பட்ட வசந்த சொய்சாவுக்கும் சந்தேக நபர்களுக்கும் (விடுதி உரிமை யாளர்கள்) இடையில் சில காலமாக இருந்து வந்த தனிப்பட்ட குரோதம் காரண மாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

 

சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள னர். சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளன.

எம்.எஸ். பாஹிம்