இந்திய அணிக்கெதிரான தொடரில் சாதனைகள் படைத்த தென் ஆபிரிக்க அணி !

 faf-abd-afp-750jpg

 தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் தென் ஆபிரிக்க அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந் நிலையில் இவ் வெற்றியின் மூலம் தென் ஆபிரிக்க அணி பல சாதனைகளை தன் வசப்படுத்தியது.

அவ் சாதனை பட்டியலின் விபரம் பின் வருமாறு,

1. ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 400 ஓட்டங் களுக்கு மேல் குவிக்கப்படுவது இது 6வது முறையாகும்.

2. ஒரு நாள் கிரிக்கெட்டில் இது வரை 17 முறை 400 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. இதில் அதிக முறை 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையை தென்ஆபிரிக்கா தட்டிச்சென்றுள்ளது.

இந்தப் போட்டியையும் சேர்த்து தென் ஆபிரிக்கா 6 முறை 400 ஓட்டங்களை தாண்டியுள்ளது

3. தென் ஆபிரிக்கா பெற்ற 438 ஓட் டங்களே, மும்பை வான்கடே மைதானத் தில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலும் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது.

இந்த மைதானத்தில் இதற்கு முன்பு 2011ம் ஆண்டு உலக கோப்பையின் போது கனடாவுக்கு எதிராக நியு+சி லாந்து 6 விக்கெட்டுக்கு 358 ஓட்டங்கள் எடுத்ததே அதிக பட்சமாக இருந்தது.

4. தென்ஆபிரிக்க அணிதலைவர் டிவில்லியர்சுக்கு இது 23வது சதமாகும். இதன் மூலம் அதிக சதங்கள் எடுத்த வர்களின் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோஹ்லி யுடன் 5வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

5. தென் ஆபிரிக்க அணியின் ஆரம்ப வீரரான 32 வயதான ஹ’pம் அம்லா 15 ஓட்டங்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார். இதன் மூலம் அதிவேகமாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

126 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று அதில் களம் இறங்கிய 123வது இன்னிங்சிலேயே இந்த மைல்கல்லை அம்லா கடந்துள்ளார்.

6. தென்ஆபிரிக்கா தனது இன்னிங்சில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசியது. ஒரு இன்னிங் சில் அதிக சிக்சர் அடித்த 2வது அணி என்ற சிறப்பை தென்ஆப்பிரிக்கா பெற் றது. 2014ம் ஆண்டு மேற்கிந்திய தீவுக்கெதிராக நியு+சிலாந்து 22 சிக்சர்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

7. குயின்டான் டி காக் இந்தி யாவுக்கு எதிராக 9 இன்னிங்சில் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் ஒரு அணிக்கு எதிராக 5 சதங்கள் அடித்தவர் என்ற சாதனை அவர் வசம் ஆனது.

பாகிஸ்தானின் சல்மான்பட் இந்தியாவுக்கு எதிராக 18 இன்னிங்சில் 5 சதங்கள் எடுத்ததே முந்தைய சாதனை யாக இருந்தது.

8. 2002ம் ஆண்டில், பாகிஸ்தானின் அப்ரிடி ஒரு நாள் போட்டியில் 48 சிக்சர்கள் எடுத்ததே ஒரு ஆண்டில் வீரர் ஒருவரின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாக இருந்தது.

அந்த நீண்ட கால சாதனையை டிவில்லியர்ஸ் முறியடித் தார். டிவில்லியர்ஸ் இந்த ஆண்டில் மட்டும் 58 சிக்சர்கள் (20 போட்டி) அடித்திருக்கிறார். இதில் நடப்பு தொடரில் எடுத்த 20 சிக்சர்களும் அடங்கும்.