15 வருட அரசியல் அதிகார நிலைப்பாடு கை நழுவிப்போய் ….!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி 
நாலாறு மாதமா குயவனை வேண்டி
கொண்டு வந்தானடி தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி !

 
15 வருட அரசியல் அதிகார நிலைப்பாடு கை நழுவிப்போய் ஊருக்கு அதிகாரம் தரப்போகிறோம் என்கின்ற அக்கரைப்பற்று மக்கள் மீது அவர்கள் ஏற்றுக்கொள்ளதா போதும் திணிக்கப்பட்டு போன மாய தோற்றப்பாடுகளுக்கும் முடிவுகள் கிடைத்தன.

 
அட்டாளைச்சேனை மக்கள் வேண்டி நின்றது உதுமா லெப்பை ஏலவே சுமார்  ஏழரை வருடம் வகித்த பதவியை வழங்க வேண்டுமென்பதல்ல 
பாரளுமன்றத்தில் அட்டாளைச்சேனையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை அமரச் செய்ய வேண்டுமென்பதே அது யாரக இருந்தாலும் சரி

 
ஆனால் அங்கே இருக்கின்ற போட்டிகள் சமனானவை
தனி மனித திருப்தி என்கிற விடயத்துக்காக முழு அட்டாளைச்சேனையும் பலிக்கடாவாக்கப்படிருப்பது ஒருபுறமிருக்க
கடந்த பாரளுமன்ற தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது மாகண அமைச்சரொருவர் அக்கரைப்பற்றில்” வருங்கால சுகாதர அமைச்சை பெற இருக்கும் ஊர்”என குறிப்பிட்டார் 80 சதவீத அக்கரைப்பற்று மக்கள் கணக்கிலெடுத்து கொள்ளவுமில்லை.

 
20சதவீத அதாஉல்லாஹ் எதிர்பாளர்களை அது திருப்திபடுத்தியது 
இருந்தாலும் நடந்தது என்ன? என்கிற ஏக்கம் அவர்களுக்கு இன்றிருக்கிறது 
கட்சி காப்பாற்ற …..என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட கதையாடல்கள் இனி தொடரும்
இருந்ததை  இழந்த வலியுடன் அக்கரைப்பற்றும் இன்னுமொரு முறை தமது பாராளுமன்ற கனவு தகர்க்கப்பட்ட நிலையில் அட்டாளைச்சேனை சமுகமும் பெரு மூச்சு விடும் !

 

– அஸ்மி அப்துல் கபூர் –