மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை நகர சபை ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.