எஸ்.அஸ்ரப்கான்
கல்முனை இமாம் விளையாட்டுக் கழகம் நடாத்துகின்ற இமாம் பிரீமியர் லீக் ரீ-20 முக்கோண கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியில் அஸ்- ஸம்ஸ் அணி 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இமாம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா தலைமையில் கடந்த (23) கல்முனை சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் போட்டியில் கல்முனை அஸ்-ஸம்ஸ் கழகத்தினரை எதிர்த்து கல்முனை இமாம் விளையாட்டுக் கழகத்தினர் மோதியிருந்தனர்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றனர். அஸ்- ஸம்ஸ் அணி சார்பில் எம். சமி 54 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாகப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இமாம் விளையாட்டுக் கழகத்தினர் 20 ஓவர் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி கண்டது.
இப்போட்டிக்கு அதிதிகளாக முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும், இமாம் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகருமான ஐ.எல்.ஏ.அஸிஸ், கல்முனை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஆர் நபாயிஸ், இமாம் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவரும் அறிவிப்பாளருமான கவிஞர் ஸாஹிர் கரீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.