எஸ்.அஷ்ரப்கான்
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை வடக்கு மற்றும் மேற்கு (நீலாவனை, மருதமுனை, நற்பிட்டிமுனை தமிழ், நற்பிட்டிமுனை முஸ்லிம், சேனைக்குடியிருப்பு) பகுதிகளுக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட இணைப்பாளராக கல்முனை மாநகர சபைஉறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாசிம் அவர்களினால் இந்நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைமையகமாகிய சிறிகொத்தாவில் வைத்து இந்நியமனக் கடிதம் மாநகர சபை உறுப்பினர் நபாருக்குவழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.