எஸ்.அஷ்ரப்கான்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் விசேட கூட்டம் நேற்று (24) கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத் திட்ட வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு அதிதியாக அம்பாரை மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் கலந்து சிறப்பித்தார்.
இங்கு நற்பிட்டிமுனைக்கான செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது. இதில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் நற்பிட்டிமுனைக்கான செயலாளராக கல்முனை நீதிமன்றத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர் எம்.ஐ.நிரோஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் ஆயுட் கால தலைவராக டாக்டர் இப்றாஹிம் தெரிவு செய்யப்பட்டார். இவ்வமைப்பின் தேசிய தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை அவர்களினால் இவர்களுக்கான நியமனப் பத்திரங்கள் வழங்கி வைக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.