எஸ்.அஷ்ரப்கான்
கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (24) சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு 8 தங்கம், 6 வெள்ளி, 8வெண்கலம் அடங்கலாக 22 பதக்கங்களை பெற்றுக் கொண்டு தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பினரும், தென் கிழக்கு பல்கலைக்கழக பேதனாசிரியருமான முஹம்மது இக்பால் தெரிவித்தார்.
இப்போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெமீல் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



