ஆசிரியர் சேவையின் முதலாவது தடைதாண்டல்…!

எஸ்.அஷ்ரப்கான்
 
ஆசிரியர் சேவையின் முதலாவது தடைதாண்டல்
……பரீட்சைக்கான மொடியுள் பயிற்சிகள் ஆரம்பம்…..
images
 
2008.07.01முதல் மீளமைக்கப்பட்ட இலங்கைஆசிரியர் சேவையின் வினைத்திறன்காண்தடைதாண்டலுக்காகவிதத்துரைக்கப்பட்டுள்ளமொடியுள்களுக்கானபயிற்சிவகுப்புக்கள் நாடெங்கிலுமுள்ள 109 ஆசிரியர் பயிற்சிமத்தியநிலையங்களிலும் இம்மாதம் 29ஆம் திகதிஆரம்பமாகி30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
 
இதற்கான அறிவுறுத்தல்கள் கடந்த 16ஆம் திகதி கல்வி அமைச்சில், கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், ஆசிரியர் கல்வி நிர்வாகத்திற்கான ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், 97 கல்வி வலயங்களையும் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி மத்திய நிலைய முகாமையாளர்;களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இதன்போது 2017.10.22க்குப்பின் பதவி உயர்வுக்குத் தகுதி பெறும் 2014.10.22க்குப்பின் நியமனம் பெற்ற பட்டதாரி (13.07வகை), 2012.10.22க்குப் பின் நியமனம் பெற்ற கல்வியியல் கல்லூரிப் பயிற்சி(13.09அ வகை), ஆசிரியர் கல்லூரிப் பயிற்சி(13.09ஆ வகை), தொலைக்கல்விப் பயிற்சி(13.9இ வகை) ஆசிரியர்களுக்கு, 1முதல் 7(i)வரையிலான மொடியுள் பயிற்சிகள் வழங்கப்படும்.
 
2017.10.22க்குப்பின் பதவி உயர்வுத் தகுதி பெறும் பொதுப்பட்டத்துடன் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பெற்ற(13.10(i)வகை), கல்வி இளமாணிப்பட்டம் பெற்ற(13.10(ii)வகை),பயிற்;சியுடன் பட்டம் பெற்ற(13.10(iii)வகை)
அதாவது2010.10.22க்குப்பின் சான்றிதழ்நியமனம் பெற்றஆசிரியர்களுக்கும் 1முதல் 7(i)வரையிலான மொடியுள் பயிற்சிகள் வழங்கப்படும்.
 
2017.10.22க்குப்பின் பதவி உயர்வுக்குத் தகுதிபெறும் 2010.10.22க்குப்பின் கல்வி இளமானிப் பட்டத்துடன் (13.08வகை) நேரடியாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 1முதல் 7(ii)வரையிலான மொடியுள் பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.