ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான தொழில் விவசாயமாகும்.அதில் இயற்கை எழில் கொஞ்சும் கொக்கடிச்சோலை பிரதேசத்திலேயே அதிகப்படியான நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கொக்கடிச்சோலை பிரதேசம் அபிவிருத்தி பணிகளில் கடந்த ஆட்சியின்பேதது கண்டு கொள்ளப்படாமைக்கு நெடியமடு கண்ட பெரிய வெளி பாலமும் சேதமடைந்துள்ள வீதிகளுமே சாட்சிகளாகும்.
கடந்த 2009ம் ஆண்டு இம்மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட நெடியமடு கண்ட பெரிய வெளி பாலம் மற்றும் வயல்வெளி பிரதான பாதை என்பன வெள்ளம் ஏற்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை புனரமைப்புச்செய்யப்படாது அழிவடைந்த நிலையிலேயே காட்சி தருகின்றன.
இப்பாலம் உடைந்து காணப்படுவதால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வேளாண்மை செய்யும் விவசாயிகள் வயல்வெளிகளுக்குள் செல்லமுடியாமலும் அறுவடைசெய்த நெல்லை ஏற்றிவர முடியாமலும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த பாலம் உடைந்துள்ளமையால் சுமார் பல மைல்தூரம் சுற்றியே வரவேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மாவட்டத்தின் பிரதான வருமானத்தை இட்டித்தரும் இம்மக்களின் பிரதான போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.