ஜே .எம் .வஸீர்
கம்பளை சாஹிரா கல்லூரிக்கு புதிய அதிபராக கல்வி அமைச்சில் தேசிய பாடசாலை பிரிவில் உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியான A .L .சிராஜ் அவர்களை கல்வி அமைச்சு புதிய அதிபராக நியமனம் செய்துள்ளது .
இவர் தனது கடமை பொறுப்புகளை எதிர்வரும் 2015.10.23 வெள்ளிக்கிழமை ஏற்க்கவுள்ளார் .
இப்பாடசாலையில் சுமார் 3100 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் . அத்துடன் மும் மொழிகளிலும் கல்வி போதனைகள் இடம்பெருவதோடு பல் வேறு பட்ட இணை பாட விதானங்களிலும் இப்பாடசாலை மத்திய மாகாணத்தில் சிறந்த அடைவுகளை பெற்றிருப்பது குறுப்பிடத்தக்கது ,
இவ் அதிபர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திப்பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் z .தாஜுதீன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
முன்னாள் கல்வி அமைச்சர் டாகடர் .பதியுதீன் மகுமூத் அவர்களின் அயராது முயற்ச்சியால் கட்டியெளுப்பபட்ட இப்பாடசாலைக்கு மிக நீண்ட இடை வெளிக்கு பிறகு தகுதியான அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதுடன் இதன் வாயிலாக எதிர்காலத்தில் மாணவர்களின் அடைவுகள் மேலும் மேலோங்கும் என தெரிவித்தார் , மேலும் இன் நியமனத்தினை நிச்சயம் மத்திய மாகான முஸ்லிம் கல்வி சமூகம் நிச்சயம் வரவேற்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் .