காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் !

பழுலுல்லாஹ் பர்ஹான்
 
IMG_20151018_110326_Fotor
காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் ஓர் அங்கமாக இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் 85 பேர் பங்குபற்றி இரத்ததானம் வழங்கினர்.
IMG_20151018_132424_Fotor
 
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக்கினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
 
IMG_20151018_104251_Fotor
காத்தான்குடியை தளமாகக் கொண்டு 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் கல்வி, கலை, கலாசாரம், ஆன்மிகம், சிறுவர், மகளிர் பயிற்றுவிப்பு மற்றும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
IMG_20151018_110139_Fotor