புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு !

 

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை அல்-ஹிதாயத் சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் தரம் 5; புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்த நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா தலைமையில் புதன்கிழமை(14-10-2015)பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

1-PMMA CADER-14-10-2015-2_Fotor

இதில் பிரதம அதிதியாக வர்த்தகர் என்.எம்.அஷ்ரப்,விஷேட அதிதியாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்.

 

இந்த நிகழ்வில்  மருதமுனை அல்-ஹிதாயத் சமூக நலன் அமைப்பின் தலைவர் நாமிக் நஸிர் மற்றும் உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள்  கலந்து கொண்டனர். 

2-PMMA CADER-14-10-2015-2_Fotor

பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்த நிகழ்வு அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் தலைமையில் இன்று(14-10-2015)பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

 

இதில் சமூக சேவையாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ஏ.அப்துல் ஹமீட் (தோழர் இஸ்மாயில்)அவரது பாரியார் சுபைதா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற ஆறு மாணவர்களுக்கும் 151 புள்ளிகளைப்  பெற்ற மாணவர் ஒருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

3-PMMA CADER-14-10-2015-2_Fotor

மேலும் அதிபர் எம.;ஜே.அப்துல் ஹஸீப்,ஆசிரியை திருமதி உம்முல் பரீதா அபூதாலிப் ஆகியோருக்கும் பாடசாலைக்கும் பரிசுப்பொதிகளை ஏ.அப்துல் ஹமீட் (தோழர் இஸ்மாயில்)அவரது பாரியார் சுபைதா தம்பதி தங்கள் சொந்த நிதியில் பெற்ற வழங்கினார்கள். 

4-PMMA CADER-14-10-2015-2_Fotor