அமெரிக்க தூதுவர் உள் நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க  பொலன்நறுவைக்கு விஜயம் !

ஜே .எம் .வஸீர்

இலங்கையில்  உள்ள நடுத்தர தொழில் முயர்ச்சியாலர்களை ஊக்விக்கும்  செயற்த்திட்டத்தின்  கீழ் இலங்கைக்கான  அமேரிக்க தூதுவர் அடல் கேசாப் பொலொன்னருவைக்கு  விஜயம் மேற்கொண்டார் .

unnamed - Copy (2)_Fotor

இலங்கை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதற்கும்,இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் வருமான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்குமாக சர்வதேச அபிவிருத்திக்கான அமேரிக்க நிறுவனத்தின்  (US  AID ) நிதியுதவியில் இயங்கும் இச் செயற்த்திட்டதில்   பல உதவிகள்  வழங்கப்படுகிறது  .

 

இத்திட்டமானது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயர்ச்சிகளிளுடனான பங்கான்மையின் மூலம் மேற்ப்படி நோக்கத்தினை அடைய எதிர்பார்க்கப்படுகிறது . இத் திட்டத்தின் கீழ் வடக்கு ,கிழக்கு .வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள  விரைவில் தமது தொழில் முயற்ச்சிகளை விரிவாக்ககூடிய அல்லது புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடிய தகுதி வாய்ந்த தொழில் முயற்ச்சி  உள்லோருக்கு நிதியுதவி வழங்குவதோடு ,தங்களின் உற்பத்தி இயலளவு ,இலாபத்தன்மை மற்றும் முகாமைத்துவ செயற்ப்பாடுகள் என்பனவற்றை முன்னேற்றுவதற்கு ,பணம் ,மற்றும் தொழில் நுட்ப்ப உதவிகளையும் வழங்குகிறது .

unnamed - Copy (5)_Fotor

இவ்வாறு (US AID )நிறுவனத்தினால் 41 மில்லியன்  உதவி  வழங்கிய பொலொன்நருவை,கல்லெல்லயில்  அமைந்துள்ள  ALL FOCUS( PVT) LTD மா உற்பத்தி நிறுவனத்திற்கு அமேரிக்க தூதுவர் அடல் கேசாப் கண்காணிப்பு  விஜயமொன்று மேற்கொண்டிருந்தார் . மா உற்பத்தி  எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ?தமது  பிரதான இலக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா ? சந்தை படுத்தல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ?என்பன பற்றி அமெரிக்க தூதுவர்  தனது  விஜயத்தின் போது கேட்டும் ,கண்டும் அறிந்து கொண்டார் .

unnamed - Copy (4)_Fotor

பொலொன்நருவை,கல்லெல்லயில்  அமைந்துள்ள மா உற்பத்தி நிறுவனத்தில்  சுமார்  30 க்கும்  மேர்ப்பட்டவர்கள் நேரடியாக தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளதுடன்  சுமார்  100 க்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார்கள் .

(US  AID ) நிறுவனத்தினால் உதவி  வழங்கிய இந்த மா உற்பத்தி  ஆலை  தற்போது ISO  தரச்சான்ருதலுக்காக வின்னப்பிதுள்ளதுடன் அச்சான்றிதழ் கிடைத்தவுடன் தரமான கோதுமை மாக்களை  விஷேடமாக  மத்திய கிழக்கு  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அதன் மூலம் தமது உற்பத்திகளையும் ,சந்தைபடுத்தளையும் பல மடங்கு விருத்தி செய்துகொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .

unnamed - Copy_Fotor

இதன் போது மா உற்பத்தி ஆலையின் உரிமையாளர் பக்கீர்  றபீக் ,அதன் ஆலோசகர்  Z .தாஜுதீன்  உள்ளிட்ட பிரமுகர்களும் சிறிய நடுத்தர வர்த்தகர்களும் கலந்து சிறப்பித்தனர் .