சிறுவர் கொலையைக் கண்டித்து யாழ். பஸ் தரிப்பிடத்தில் ஆர்ப்பாட்டம்!

பாரூக் சிஹான் 
சிறுமி சேயா மீதான வன்புணர்வு படுகொலையை கண்டித்தும் நாட்டில் இடம்பெறும் அனைத்துவிதமான துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இஅதனை தடுத்து நிறுத்தக் கோரி சமூகநீதிக்கான வெகுஜன அமைப்புஇபெண்கள் விடுதலை சிந்தனை அமைப்பு புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(2015.10.3) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ்நிலையத்துக்கு முன்பாக நடைபெற்றது.
DSCF5123_Fotor
இன்று எமது நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக பொருளாதார கலாசார அரசியல் மாற்றங்கள் இது போன்ற குற்றச் செயல்களுக்கும் வன்முறைகளுக்கும் பெருகி வரக் காரணமாக உள்ளன என்று கோசமிட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று நாட்டில் பல பாகங்களில் இப்படியான சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளே இடம்பெறுகின்றன. ‘இவ்வாறானவன்முறைகளுக்கு உந்துதலாக உள்ள போதைப் பொருட்களை தடை செய்யவும்’  ‘பாலியல் துஷ்பிரயோகங்களுக்குத் தனி நீதிமன்றம் மூலம் தண்டனைகள் வழங்க வேண்டும்’ போன்ற கோசங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினா்.
DSCF5130_Fotor
இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் பெண் விடுதலை சிந்தனை அமைப்பு இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.

 DSCF5160_Fotor
DSCF5171_Fotor