அமைச்சர் ஹக்கீம் தலைமையில் வவுனியா அபிவிருத்தி மாநாடு !

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் போராறு வாவியிலிருந்து ரிஸோவயல் ஒன்றை உருவக்குவதன் மூலம் இலங்கiயில் முதன் முதலாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர் வழங்கள் திட்டமொன்றை மாத்திரம் பிரத்தியேகமாக அமுல்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

DSC_0087_Fotor
சனிக்கிழமை (03) வவுணியா பிரதேசத்திற்கு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன் சென்று நிலைமையைப் பார்வையிட்ட, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வவுனியா கச்சேரியில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

1H6A2338_Fotor
அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
தற்போழுது தேசிய நீர் வழங்கல் சபையூடாக 45 சத வீதமான மக்களுக்கு குடிநீர் வழங்கலை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இது 2020ஆம் ஆண்டுக்குள் 60 சத வீதமாக அதிகரிக்க பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடடுள்ளோம் எனவும் அவர் கூறினார்.
வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில் இரசாயன பதார்த்தங்களின் கலப்பினால் சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் மேற்கொள்வதாகவும், இச்செயற்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

DSC_0140_Fotor
நீரில் கலந்துள்ள இரசாயன பாதார்த்தங்களை வேறாக்கி, நீரை சுத்தீகரிப்பதற்கு உதவும் ஆர்ஓ என சுருக்கமாக குறிப்பிடப்படும் இயந்திரத்தையும், இவ்வாறான பொறிமுறையை சிறுநீரக நோய் அதிகம் காணப்படும் ஏனைய சில மாகாணங்களுக்கும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாம் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

 

புளோரைட் அதிகமுள்ள தண்ணீரின் கனதியை குறைப்பதனூடாகவும் தண்ணீரில் செறிந்துள்ள கல்சியத்தின் அளவை குறைப்பதனூடாகவும் சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில் தூய நீரை வழங்குவது சாத்தியமாகும். தண்ணீரில் கலந்துள்ள கனிப்பொருள்களின் செறிவு சிறுநீரகத்தோடும், கல்லீரலோடும் தொடர்பான நோய்களுக்கு வழிகோலுகின்றன.

DSC_0087_Fotor

குழாய் நீர் கிணறுகளின் உபயோகம், மழை நீரை தேக்கி வைத்து வறட்சி நிலவும் காலங்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

 

வட மாகாணத்தை பொருத்தவரை முழு குடிநீர் வழங்கள் திட்டங்களையும், முழு நாட்டினது நீர் தேவைப்பாடுகளையும் 45சத வீதமானதாகத் தான் நாங்கள் இதுவரை பூர்த்தி செய்துள்ளோம். 2020 ஆம் ஆண்டளவில் இதை இன்னும் 15 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான பாரிய நீர் வழங்கள் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம்.

 

வவுனியா மாவட்டத்தை ஒப்பிடும்போது இப்போது 4 சத வீதத்தைத்தான் நீர் வழங்கல ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்;. இதை 2020ஆம் ஆண்டுக்குள் 40 வீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளேம். ஒப்பீட்டு ரீதியாக பார்க்கம்போது முழு நாட்டிலும் உள்ள நீர் வழங்கல் சேவை 15 சத வீதத்தால் அதிகரிப்பதற்கு 2020 வரை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வட மாகாணத்தை பொருத்தவரை 9 சத வீதத்திலிருந்து 20 சத வீதம் வரை அதிகரிக்க இருக்கின்ற போதிலும், குடிநீர் வழங்கல் திட்டங்களை விடவும் 50 சதவீதத்துக்கு மோல் அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
வவுனியா மாவட்டத்தை பொருத்தவரை 4 சத வீதத்திலிருந்து 40 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கிட்டத்தட்ட இருக்கின்ற நீர்வழங்களை விடவும் 100 சத வீதமாக அதிகரிக்கவும் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம் என்றும் கூறினார்.
எனவே முழு நாட்டுடன் ஒப்பிடும் போது வட மாகாணத்துக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் நீர் வழங்கல் திட்டங்கள் தேசிய சராசரியை விடவும் கூடுதலான கரிசனையை இந்த வரவு செலவு திட்டம் முடிந்த பின்னர் செலுத்த உள்ளோம்.
அதே போல் மல்வத்து ஓயா நீர் வழங்கல் திட்டத்தையும் திட்டமிட்டிருக்கிறோம். 240,000 சனத்தொகையை கொண்ட மாவட்டத்தில் அதனுடைய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யக்கூடியதாக, சுத்தமான குடிநீர் 29000 மீற்றர் கியூப் வரையிலான கொள்ளலவு தேவைப்படுகின்றது. இதே போல இன்னும் குறிப்பிட்ட பிரதேசங்களை மையப்படுத்தி சிறிய நீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றியும் கலந்துiறாடியுள்ளோம்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய தலைமையில் சிறுநீரக நோயினால் பதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு அதற்கென்று பிரத்தியேகமான சுத்திகரிப்பு நீர் வழங்கல் திட்டங்களை வழங்கவும் நாங்கள் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதனடிப்படையில் சுத்திகரிப்பு இயந்திரங்களை பல இடங்களில் பொருத்த உள்ளோம் எனவும் அவர் சொன்னார்.
நாங்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் இதுபோன்ற செயற்திட்டங்களை பிரத்தியேகமாக ஆரம்பித்து வைத்துள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாருக், அமைச்சின் மேலதிகச் செயலாளர் முயீனுதீன், பிரதேச செயளாலர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள்;, மாவட்ட முகாமையாளர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

 

ஜெம்சாத் இக்பால்