(வீடியோ) ஹொங்கொங் நாட்டுக்கு தனது கன்னி பாராளுமன்ற விஜயத்தினை மெற்கொள்கின்றார் முஜிபுர் ரஹ்மான்..!

 

அஹமட் இர்ஸாட்

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஆசிய மனித உரிமை அமைப்பு பேரவையின் அழைப்பின் பேரில் ஹொங்கொங் நாட்டுக்கான முன்று நாள் கன்னி பராளுமன்ற விஜயத்தினை நாளை  ஞாயிற்றுக் கிழமை 04.10.2015 மேற்கொள்ளவுள்ளார்.

Untitled

ஆசிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மூன்று நாள் கருத்தரங்கில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக பொலீஸ் கைது மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான ஹொங்கொங் கவ்லூன் நகரில் இடம் பெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் வருக்கின்ற 8ம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாகவும் கூறினார்.