சட்டவிரோதமாக கிராம மக்கள் நீர் வினியோகத்தை பாவிப்பதினால் மாணவர்கள் பாதிப்பு !

02_Fotor

அபு அலா 

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கான நீர் வினியோகம் பாடசாலை காணப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் 01 கிலோ மீற்றர் தூரத்தில் ஆரம்பிக்கின்றது. இந்த இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் நீவ்மெல்போட் கிராம மக்களில் ஒரு சிலர் பாடசாலைக்கான நீர் வினியோக குழாயில் எந்த விதமான முன் அனுமதியின்றி சட்ட விரோதமாக நீரினை குழாய்கள் மூலம் பெற்று வருகின்றனர.; சிலர் மோட்டர் கொண்டு நிரினை பெற்றும் வருகின்றனர். இதனால் பாடசாலைக்கு முறையான நீர்வினியோகம் இன்றி மாணவர்கள் அல்லல் படுகின்றார்கள்.

03_Fotor

மலசல கூடத்தை முறையாக பாவிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் துர்நாற்றம் வீசுகின்றது. குடிப்பதற்தும் முறையான நீர் இல்லை. இதனால் மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்;பட்டுள்ளதுடன் பல நோய்கள் வர வாய்புக்கள் உள்ளது. இது தொடர்பாக நீரை சட்ட விரோதமாக பாவிப்பவர்களுக்கு பாடசாலை மேம்பாட்டு குழுவினால் நேரடியாக அறிவுருத்தப்பட்டு இருக்கின்றது. சிலர் இதனை அகற்றிக் கொள்வதாக கூறினாலும் சிலர் சட்டத்திற்கு முரனாக நீரை பெற்றுக் கொண்டு சட்டம் பேசுகின்றனர்.

hinu (3)_Fotor

இந் நிலையில் ஏதும் கலப்படங்கள் ஏற்பட்டு பிள்ளைகளுக்கு பாதிப்புக்கள் எற்படுமோ என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசங்களில் சிலர் விவசாயம் போன்றவையும் செய்து வருகின்றனர். இந்த பாடசாலை ஒரு கலவன் பாடசாலை இதனால் பெண் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 54 ஆசியர்களும் காணப்படுகின்றனர். மலசல கூடங்களுக்கு சில நேரங்களில் நீர் இல்லை. பாடசாலையில் காணப்படும் நீர் வினியோக கட்டமைப்பும் பாரிய அளவில் பாதிப்டைந்துள்ளது.

hinu (7)_Fotor

தற்போது புதிய செயற்திட்டத்திற்கு அமைவாக கல்வி அமைச்சினால் புதிய மலசல கூட அமைப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை அமைக்கபட்டாலும் நீர் தேவை மேலும் முக்கியமானதொன்றாகும். இந் நிலையில் மேற்படி நீரை சட்ட விரோதமாக நீரை பெருபவர்கள் மாணவர்கள் நலன் கருதி விழகிக் கொள்வதோடு. சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பாடசாலைக்கான நீர்வினியோகத்தை முறையாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்க் கொண்டு வருகின்றது.