ஐ.சி.சி. தரவரிசையில் முத­லி­டத்தில் அவுஸ்­தி­ரே­லியா ஆனால் இலங்கை ?

சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டியலில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது.

sri-lanka-practice

நேற்று முன்­தினம் ஐ.சி.சி. ஒருநாள் சர்­வதேச போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டி­யலை வெளியிட்­டது. இதில் 103 புள்­ளி­க­ளுடன் இலங்கை அணி ஐந்­தா­வது இடத்தில் உள்­ளது. முத­லி­டத்தில் 127 புள்­ளி­க­ளுடன் அவுஸ்­தி­ரே­லியா இருக்­கி­றது.

 

இந்­தியா 115 புள்­ளி­க­ளுடன் இரண்­டா­வது இடத்­தையும், மூன்­றா­வது இடத்தில் 110 புள்­ளி­க­ளுடன் தென்­னா­பி­ரிக்க அணியும், 109 புள்­ளி­க­ளுடன் நியூ­ஸி­லாந்து நான்­கா­வது இடத்­திலும் உள்­ளன.

 

அண்­மையில் பாகிஸ்தான் அணி­யு­ட­னான தொடரில் இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்­தது. இந்த தோல்வி தர­வ­ரிசைப் பட்­டி­யலில் இலங்கை அணி முன்­னேற தடை­யாக அமைந்­துள்­ளது.

 

அதேபோல் பாகிஸ்­தானை பின்­னுக்குத் தள்ளி 96 புள்­ளி­க­ளுடன் பங்­க­ளாதேஷ் அணி 7 ஆவது இடத்தில் இருக்­கி­றது. பாகிஸ்தான் 90 புள்­ளி­க­ளுடன் 8ஆவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து 100 புள்ளிகளுடன் இலங்கைக்கு அடுத்தபடியாக 6ஆவது இடத்தில் உள்ளது.