அக்கரைப்பற்றில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஏற்பாடு செய்யப்பட்ட விபச்சாரம் – கள்ளத்தொடர்பு என்பவற்றிக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் பெலிசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை தடுக்க 20க்கு மேற்பட்ட பொலிசார் பள்ளிவாசல் பிரதேசத்தில் தடிகளுடன் குவிக்கப்பட்டிருந்தனர்.
கண்டன ஆரப்பாட்ட இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் தடுத்ததுடன் இளைஞர்களை உடன் கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டார்.
மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் 14 நாட்களுக்கு எவ்வித காரணங்களுமின்றி சிறைக்கு அனுப்பப்படுவார்களட என பொலிசார் அச்சுறுத்தலும்; விடுத்தனர்.
இதனை இளைஞர்கள் ஏற்க மறுத்ததினால் பொலிசாருக்கும் இப்பிரதேச மக்களுக்குமிடைய சிறிய முறுகல் நிலை தோற்றம் பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டமானது விபச்சாரம் – கள்ளத் தொடர்பு கலாச்சார விழிப்புணர்வு என்பவை தொடர்பாகவே நடத்தப்பட விருந்தன.
குறிப்பாக மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அஸாத் சாலியின் விபச்சார நடவடிக்கையையும் இஸ்லாமிய சட்டத்தை கேவலப்படுத்தியமையும் பௌத்தர்களிடம் முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தமைக்கும் எதிராக கண்டனங்கள் எழுப்பப்படவிருந்தன.
எனினும் இதனை அறிந்த சில உயர் அரசியல் அதிகாரம்படைத்தவர்களின் அழுத்தங்களினால் இக்கண்டன ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் ஈமான் கொண்டோர் அமைப்பு கிழக்கு பூராகவும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.