இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமானது பொற் காலம் எனலாம் ஏனெனில் எமக்கு முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை விட நாம் அனைத்து விதமான தொழிட் நூட்பங்களும் உள்ளடக்கிய ஒரு சுக போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உண்மையில் இன்றைய உலகில் பல கண்டு பிடிப்புக்களுக்கும் நவீன வி்ஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் அதிக காரணமாக இருக்கிறவர்கள் மேற்கத்திய நாட்டினர்தான் என அதிகமான பெரும் பான்மை சமூகத்தினர் இன்று கூறுகிறார்கள் மேற்கத்தயர்களால் உலகில் சில தீமைகள் ஏட் பட்டு இருந்தாலும் அதை விட பல மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் எந்த மனிதனுக்காக தொழி நுட்பத்தை கண்டு பிடித்து மனித வாழ்க்கையை நவீன மயப் படுத்துகிறார்களோ அவர்களையே அழிப்பதற்கு அதை விட பன் மடங்கு மதத்தை பரப்புவதற்காக நாட்டை பிடிப்பதற்காக வென்று அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கையான விடயமாகும்.
உண்மையில்
இன்று உலகில் அரபு தேசங்களில் மக்கள் செல்வச் செழிப்பாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்கள் என்றால் அது ஐரோப்பியனரே எண்ணெய் கண்டு பிடிப்பு கடல் நீரை குடி நீராக மாற்றல் போன்ற பல் வேறு தொழி நுட்பங்களை உதாரணமாக் கூட கூறலாம் ஆனால் அதே ஐரோப்பியர்கள்தான் உலகத்தை குழப்பத்திலும் ஆழ்த்தி தீவிர வாதத்தையும் பயங்கர வாதத்தையும் தூண்டி விட்டு இந்த உலகத்தையும் நிம்மதி இழக்கச் செய்து கொண்டு அவர்கள் மட்டும் நவீன விஞ்ஞான அறிவியலில் வழர்ந்து கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் உண்மை யென்ன வென்றால் நவீன கண்டு பிடிப்புக்களுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் என்ற கருத்து முற்றிலும் தவறானதாகும் மேலை நாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே மிகப் பெரும் கண்டு பிடிப்புக்களுக்கும் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் முஸ்லிம்கள்தான்
என்பதை கடந்த காலத்தில் வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகள் சிலரை பார்ப்போமேயானால் அறிந்து கொள்ளலாம்.
அல்குவாரிஸ்மி :கணிதம் வானவியல்
அல் ராஜீ:மருத்துவம்
அல் ஹைதம்: கணிதம் ஒளியியல்
அல் பிரூணி:கணிதம் தத்துவம் வரலாறு
இப்னு சீனா:மருத்துவம்
அல் இத்ரீஸி:புவியியல்
இப்னு ருஸ்து:மருத்துவம் தத்துவம்
ஜாபிர் இப்னு:பௌதீகம்
அல் தபரி:மருத்துவம்
இப்னு ஜூஹ்ர்:அறுவை சிகிச்சை
இது போன்று பல் வேறு விஞ்ஞானிகளை அடிக்கிக் கொண்டே போகலாம்
ஆனால் இன்றைய சூழ் நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதற்கும் அவர்களின் மதமும் காரணமல்ல முஸ்லிம்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுவதற்கு இஸ்லாமும் காரணமல்ல மாறாக பொருளாதார வசதி ஆள்வோரின் ஊக்கு விப்பு போன்றவை காரணமாகவுள்ளன காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின்தங்கும் நிலையை அடையலாம் பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம் அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் பெறிய அளவில் ஊக்கு வித்தனர் ஆனால் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுக போகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர் எனவேதான் தற்போதய சூழ் நிலையில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக் கணிசமாக காணப்படுவதற்கு அதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
ஆயினும் கடந்த காலத்தின் மீது பழியை போட்டு விட்டு முஸ்லிம்களாகிய நாம் தப்பித்துக் கொள்ள கூடாது மெம் மேலும் உலகத்தின் வளர்ச்சிக்கு பாடு படக் கூடிய முஸ்லிம் இளைஞ்சர்களை நாம் ஊக்கு வித்து உருவாக்க ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
ஆனாலும் அதிகமான நாடுகளில் 250 ஆண்டு கால கிறிஸ்தவ சமூதயாத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது கூட முஸ்லிம்களின் கடந்த ஜம்பது ஆண்டு கால வளர்ச்சி மெச்சத்தக்கதாகவே காணப்படுகிறது இன்ஷா அல்லாஹ் இன்னும் ஐம்பது ஆண்டுகளிலும் கிறிஸ்தவர்களின் 250 வருட கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் சாதனை படைப்பார்கள் அதற்கான அறிகுிகளும் தென் படுகின்றன
வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை