பாடசாலை மாணவியின் தந்தை நீதி வேண்டி உண்ணாவிரதம் !

எம்.ஏ.தாஜகான்

 

பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவியாக பதிவு செய்யப்பட்டு பாடசாலைப் பரீட்சார்த்தியாக தோற்றுவதற்கு அனுமதியளிக்கப்படாமையினால் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து, நீதியினை நாடிச்சென்ற பொழுது அதிபர் அவர்களின் தகாத வார்த்தைப்பிரயோகத்தினால் இன்னும் தொடர்ச்சியாக பாதிப்படைந்த அப்துல் ஹமித் பாத்திமா றொஸ்னா அவர்களின் பெற்றோர்கள் பல உயர்மட்ட இடங்களுக்கு முறையிட்டும் இதுவரை குறித்த அதிபரை விசாரணை செய்யவோ, மாணவிக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதை அடிப்படையாகக் கொண்டு இன்று (2)பொத்துவில் பிரதேச செயலக முன்னால் குறித்த பாதிப்படைந்த பிள்ளையின் தந்தை நீதிக்காக வேண்டி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

DSCN1502_Fotor

சுமார் மூன்று மணி தொடர்ச்சியான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கும் பொழுதுகளில் பொத்துவில் பிரதேச செயலாளளர் என்.எம்.முசர்ரத், பொத்துவில் உபவலயக்கல்விப்பணிப்பாளர் என். அப்துல் வஹாப், பொத்துவில் பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் முக்கிய கல்வி சம்பந்தமான பிரமுகர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதிப்படைந்த மாணவி மற்றும் பெற்றோருக்கான நீதியினை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருவதாக பிரசன்னமானவர்கள் தெரிவித்தனர்.

DSCN1500_Fotor

 

உண்ணாவிரதத்தை முடிக்குமாறு பிரதேச செயலாளர் கூறியததற்கினங்க குறித்த நபர் அப்துல்ஹமித் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்துல்ஹமித் அவர்கள்:
எனது மகள் பாத்திமா றொஸ்னாவை பாடசாலை பரிட்சார்த்தியாக தோற்றவிடாமல் குறித்த அதிபர் தடுத்தமை பற்றியும், எனது மகளுக்கான அனுமதியட்டை மறுக்கப்பட்ட அதேவேளை பாடசாலைக்கு சமூகம் அளிக்கப்படாத வேறு மாணவிக்கு அனுமதி வழங்கப்பட்டமையும், சட்டரீதியான குற்றம் என்பதை தெரிந்திருந்தும் குறித்த அதிபர் அவர்கள் தகாத வார்த்தை பிரயோகங்களில் ஏசியமை குறித்தும் விளக்கமளித்தார். அதே நேரம் பல கல்வித்திணைக்களங்களுக்கு முறையிட்டும் காலதாமதம் ஏற்பட்டு வருவது தவிர்க்க முடியாது. என்றும் குறிப்பிடார். இரண்டு வாரத்துக்குள் முதற் கட்டமாக அதிபர் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், அதன் பின்னர் நீதியான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அவ்வாறு இல்லையெனில் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இடம்பெறும் எனவும் சுட்டிக்காட்டினார்.