முதலமைச்சர் ஊடகப்பிரிவு
தலை சிறந்த எழுத்தாளர் அப்துல் கரீமின் மறைவு சமாதனத்தினை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாரிய இழப்பாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
புனித மக்காவில் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்ற அவர் காலமான செய்தி இலங்கை வாழ் முஸ்லிம்களை பெரிதும் வரித்தியுள்ளது. ஆங்கிலத்தில் நல்ல புலமையும் தேர்ச்சியும் பெற்றிருந்த அவர் அடக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். தனது பேனாவை சமூக சீர்திருத்தங்களுக்காகவே பயன்படுத்தி வந்த அவர், பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தனது எழுத்துத் துறையைப் பயன்படுத்தியவர்.
சமூகங்களுக்கிடையே நல்லெண்ணெத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்த பாடுவட்டவர். சுனாமியால் பாதிக்கப்பட்டு நலிவுற்றிருந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கொழும்பில் நாம் உருவாக்கிய சுனாமி கல்வி நிதியத்தின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உழைத்தவர். அத்துடன் முஸ்லிம் சமூக ஆய்வு நிலையத்தின் பணிகளில் இணைந்து பல்வேறு தகவல்களைத் திரட்ட உதவியவர் அவரின் இளப்பு முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இளப்பாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.