காத்தான்குடி பொலிஸார் வாகனங்கள் பரிசோதனை!

ஜவ்பர்கான்

 

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸாருக்கான பரிசோதனை இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க பொலிஸ் பரிசோதனையை மேற்கொண்டார்.

Sri-Lanka-Police

இதன்போது,பொலிஸாரின் அணி வகுப்பு மற்றும் பொலிஸாரின் பரிசோதனை இடம்பெற்றதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் வாகனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்களுக்கான பரிசோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

 

இதில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.