சவூதி அரேபியாவின் கரங்களை பலப்படுத்துவோம் – மசூர் மௌலானா

 

-எம்.வை.அமீர் –

 

சவூதி அரேபியாவின் 85 ஆவது தேசிய தினம் கடந்த  23 ஆம் திகதி நினைவு கொள்ளப்பட்டதை நாம் அறிவோம். சவூதியின் தேசிய தினத்தை சிறப்பிக்கின்ற வகையில் இலங்கைக்கான சவூதி தூதரகம் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு நிகழ்வுகள் இன்றைய தினம் சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரிமம்துஹ் அலி அல் – அலாப் அவர்களின் தலைமையில் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வை முன்னிட்டு இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

As Sheikh Mashood Mawlana

 

சவூதி அரேபியாவுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகள் மிக்க ஒரு காலத்தில் 85 ஆவது தேசிய தினம்அனுஷ்டிக்கப்படுவதை நாம் அறிவோம். இம் முறை புனித ஹஜ் கடமையின் போது அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்து மற்றும் சன நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கான ஹாஜிகள் இறையடியெய்திருக்கின்றனர். 

 

சவூதி அரசாங்கம் ஹஜ் ஏற்பாடுகளை இம்முறையும் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்த போதிலும் இயற்கை மற்றும் மனிதப் பிழைகளால் ஏற்படுகிற அனர்த்தங்கள் குறித்து நாம் அரசை குற்றம் காண முடியாது. இருப்பினும், வழமை போல சவூதி மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு சில நாடுகள் நடந்தஅனர்த்தங்களுக்காக அரசையும் நிருவாகத்தையும் வன்மையாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

 

குறிப்பாக, குரூர மனம் படைத்த ஷியாக்கள் இவ்விடயத்தை பூதாகரமாக்கி சவூதியினதும் மன்னரினதும்நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகின்றனர். உலகத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் புனித ஸ்தலங்களை பரிபாலிக்கும் சவூதி அரேபிய அரசுக்கு கொடிய ஷியாக்கள் அவதூறுகளை பரப்பும் கைங்கரியங்களில் ஈடுபடுவதுடன், உத்தம நபிகளாரின் உன்னத பூமியை காபிர்களுடனும்,ஸியோனிச சக்திகளுடனும் இணைந்து சிதைக்கவே திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். 

 

ஷியாக்கள் எப்போதுமே முஸ்லிம் தேசங்களை கருவறுக்க நினைக்கும் காபிர்களுக்கும், இஸ்ரேலுக்கும்,அமெரிக்க மேலாதிக்க சக்திகளுக்கும் போர் தொடுக்க முனைந்ததில்லை. அவர்களது இலக்கு என்றுமே ஸுன்னி முஸ்லிம்கள் மாத்திரமேயாகும். இன்று முஸ்லிம் தேசங்கள் பற்றியெறிய காரணம் இந்த அரக்கத்தனமான ஷியாக்களின் சூழ்ச்சி நாடகங்களாகும். 

 

இம்முறை புனித ஹஜ்ஜில் கூட கொடிய ஷியாக்கள் தமது இஸ்லாமிய விரோத செயல்களைஅரங்கேற்றியிருப்பதை அறிய முடிகிறது. ஈராக்கின் சரித்திர சிங்கம் சதாம் ஹுஸைனை ஆட்சியில் இருந்து அகற்றி அவருக்கு மரண தண்டனையை பரிசாக பெற்றுக் கொடுத்து- முஸ்லிம்களின் ஆளுமை மிக்க தலைவர் ஒருவரை சிதைத்ததில் ஷியாக்களின் பங்கு அளப்பரியது. இப்படியாக இன்று முஸ்லிம் நாடுகளில்நடைபெறும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தூபமிட்டு மூலவேராக பரவி இருப்பவர்கள் ஷியாக்களாகும். 

 

எனவே, நெருக்கடிமிக்க இக்காலங்களில் ஷியாக்களின் சூழ்ச்சிகளை புரிந்து, அவைகளை எமதுஒற்றுமையினூடாக முறியடித்து முஸ்லிம் உம்மாவை பலப்படுத்த வேண்டும். உலக முஸ்லிம்களின் நலனில் என்றும் எப்போதும் ஆத்மார்த்தமான- ஆழமான கரிசனை கொண்ட எமது பூர்வீக பூமியான சவூதி அரேபியாவின் கரங்களை இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பலப்படுத்துவோம். என்றும் தெரிவித்துள்ளார்.