அபு அலா
கொத்மலை வெதமுல்ல மண்சரிவில் பாதிக்கபட்ட மக்கள் பாடசாலையில் இருந்து வெளியேறி சனகமூக நிலையத்தில் தற்போது தங்க வைக்கபட்டுள்னர். அவர்களுக்கு தற்காலிக வீடுகள் மைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரபித்துள்ள நிலையில் அதற்கான கூரைத்தகடுகள் கொண்டு வரப்பட்டு புதிய வீடுகளை அமைப்பதற்கு தோட்ட நிர்வாகம் கூறிய இடத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் பரிசோதனை மேற்க்கொண்டுள்ளனர். அதன் அறிக்கையின்படி வேவைத்திட்டங்கள் ஆரபிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் அமைந்துள்ள 19 குடியிருப்புகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர். கொத்மலை வெதமுல்ல இறம்பொடை கயிறுகட்டி தோட்டத்தில் அண்மையில் மணிசரிவு ஏற்பட்ட பகுதிக்கு விஜயம் செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் அங்குள்ள 19 வீடுகளையும் உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக கொத்மலை பிரதேச செயலாளர் கே.எஸ்.பி.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 25.09.2015 அன்று கொத்மலை வெதமுல்ல இரம்பொடை கயிறுகட்டி தோட்டத்தில் (லிலிஸ் லேன்) ஏற்பட்ட மண்சரிவை அடுத்து அந்த பகுதிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வருகை தந்து அங்குள்ள பகுதிகளை ஆய்விற்கு உட்படுத்திய பின்பு 19 குடியிருப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாம் தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடிய பொழுது காணியை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்
அதே நேரம் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்த சுமார் 300 பேரை அவர்களின் பாதுகாப்பான வீடுகளுக்கு நேற்று முன்தினம் மாலை (27.09.2015) அனுப்பி வைத்துள்ளதாகவும் தற்பொழுது 9 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் வெதமுல்ல வாசிகசாலையிலும் சனசமூக நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் கொத்மலை பிரதேச செயலாளர் கே.எஸ்.பி.சேனாநாயக்க மேலும் தெரிவிக்கின்றார்.
இறம்பொடை தமிழ் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலையை தடையின்றி கொண்டு செல்லும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (28.09.2015); பாடசாலை வழமை போல் இயங்க ஆரம்பித்துள்ளது.
வெதமுல்ல வாசிகசாலையிலும் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடுகளையும் மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் கொத்மலை பிரதேச செயலகமும் தோட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
மேலும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சமூக சேவை அமைப்புகளும் மேலதிக உதவிகளை செய்து வருகின்றனர். தற்போதைய முக்கிய தேவை பாதிக்கப்பட்ட 30 பேருக்கும் புதிய ஆடைகளே தேவைப்படுவதாகவும் பாவித்த ஆடைகள் கொண்டுவருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் கே.எஸ்.பி.சேனாநாயக்க வேண்டுகோள் ஒன்றையும் விடுக்கின்றார்தோட்ட நிர்வாகமும் கொத்மலை பிரதேச செயலகமும் சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து உடனடியாக தங்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.