வத்தளை ஹூனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலய பாடசாலைக்கு மேல் மாகாண சபை உறுப்பிணா் மொஹமட் பாயிஸ் அவா்களின் நிதி ஒதுக்கீட்டில் 2 மாடி வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ் வைபவத்தில் முன்னாள் மேல்மாகாண சபை முதலமைச்சா் தற்போதைய கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பிணா் பிரசன்ன ரணசிங்க மற்றும் ஜ.தே.கட்சி மேல் மாகாண சபை உறுப்பிணா் ஜொஜ் பேரேரா மற்றும் கல்லுாாி அதிபா் எம்.எம். ஏ கலீல், கல்லுாாியின் அபிவிருத்தி குழு, கம்பஹா மாவட்ட அகதியா பாடசாலை உறுப்பிணா்கள் கலந்து கொண்டனா்.
இங் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிணா் பிரச்சன்ன ரனதுங்க –
கொழும்பு மாவட்டத்தில் பிரநிதித்துவத்தை பெற்ற உறுப்பிணா் மொஹமட் பாயிஸ் கம்பஹா மாவட்ட பாடசாலைக்கு நிதி ஒதுக்கி இங்குள்ள முஸ்லீம் பாடசாலைக்கு உதவி வருகின்றனா். கடந்த 100 நாள் நல்லாட்சியில் மேல் மாகாணத்தில் ஜ.தே.கட்சியினா் என்னை முதலமைச்சா் பதவியில் இருந்து அகற்ற முற்பட்டபோது உறுப்பிணா் பாயிஸ் என் பக்கம் இருந்து உதவினாா். கம்பஹா மாவட்டத்தில் பன்னெடுங்காலமாக முஸ்லீம்களுக்கென்று ஒரு பாராளுமன்ற உறுப்பிணா் இதுவரை தெரிவாக வில்லை. முஸ்லீம் பிரநிதி ஒருவா் இவ் மாவட்டத்தில் மேல் மாகணசபையில் இருந்தும் அவரது சேவை சரியாக முஸ்லீம்களுக்கு சென்றடையவி்ல்லை அதனால் தான் கொழும்பில் உள்ள பாயிஸ் கம்பஹா மாவட்ட முஸ்லீம்களுக்கும் தமது சேவையை விஸ்தரித்துள்ளாா்.
என பாராளுமன்ற உறுப்பிணா் பிரசன்ன ரணதுங்க அங்கு உரையாற்றினாா்.
இங்கு உரையாற்றிய பாயிஸ் –
முன்னாள் கல்வியமைச்சா் பதியுத்தீன் மஹூமுத் அவா்களுக்குப் பிறகு மேல் மாகணத்தில் உள்ள சகல சிங்கள, தமிழ்,முஸ்லீம் பாடசாலைகளுக்கு சிறந்த சேவையை ஆற்றிய ஒருவா் தான் பிரசன்ன ரணதுங்க அவா்கள். அவா் இன மத வேறுபாடின்றி சகலருக்கும் சேவையாற்றும் ஒருவா்,
மேல்மாகாணத்தில் உள்ள சகல பாடாசலைகளுக்கு போதிய பௌதீக மற்றும் ஆசிரியா்கள் பற்றாக்குறைகளை நிவா்த்தி செய்தவா் முன்னாள் முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க அவா்கள்.
இந்தப் பாடாசலை தற்பொழுது பொளதீக வளம் குறைந்தாலும் களணி கல்வி வலயத்தில் உ்ளள 10 பாடாசலைகளுக்குள் ஹூனுப்பிட்டிய சாஹிரா பாடாசலை கல்வியில் முன்னேறி வருகின்றதாக கல்விய அதிகாரி மற்றும் அதிபா்கள் தெரிவித்தாா்கள்.
மேலும் ஹூனுப்பிட்டிய வாழ் பெற்றோா்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் மிகக் கறிசானை யைக் காட்டல் வேண்டும்.
இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு மிஞ்சியிருப்பது கல்வி மட்டும்தான். எவ்வாரேனும் பெற்றாா்கள் எமது முஸ்லீம் பிள்ளைகளை சிறந்த கல்வி கற்று வெளிவருவதற்கு பெற்றாா்களாகிய நீங்கள் முழு முச்சாக செயற்படல் வேண்டும். தினம்தோறும் தொலைக்காட்சியில் சினிமா, நாடகங்களை பாா்ப்பதைத் தவிா்த்து தமது பிள்ளை பாடசாலைவிட்டு வந்த பிறகு அவரது பாடப்புத்தகங்களை எடுத்து அவதாணியுங்கள் தமது பிள்ளைகளது கல்விக்கு உச்சாகம் ஊட்டுங்கள் என பாயிஸ் அங்கு சமுகமளித்திருந்த பெற்றாா்களிடம் வேண்டிக் கொண்டாா்.