ஏ.எஸ்.எம்.தாணீஸ்
கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சினை யாருக்கு வழங்குவதென்ற தீர்க்கமான தீர்மானத்தையோ,முடிவுகளையோ கட்சித் தலைமை எட்டவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் 27 நடைபெற்ற கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடனும்,போராளிகளுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
திருகோணமலை மாவட்டத்தில் கட்சியை பாதுகாத்து எமது மக்களின் அபிலாசைகளை திருப்திகரமாக நிறைவேற்ற யேண்டிய கடமை கட்சிக்குள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பிற்பாடு அவ் வெற்றிடத்தை எவ்வாறு,எப்போது நிவர்த்திக்கப் போகிறீர்கள் என ஊடகவியலாளர்கள எழுப்பிய கேள்விக்கு பதிலலிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சு தங்களுக்கு வழங்கப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லா மாகாண சபை உறுப்பினர்களிடையேயும் இருக்கின்றது.குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை தொகுதியிலும் அவ் எதிர்பார்ப்பு உண்டு என்பதை நான் தெரியாதவனும் அல்ல நான் வெளிப்படையாக கூறவில்லை பொருத்தமான தருனத்தில் தலைமை இது தொடர்பான நியமனத்தை வழங்கும் என்று நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தலைமைத்துவம,; தலைவர் நியாயமான ,நேர்மையான தீர்வுக்கு வந்தார் என்ற முடிவும் ஆலோசனையும், மசூறாவும்; வரும்வரை பொறுத்திருப்போம் சுமுகமாக இத்தீர்வினை எட்ட எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் என தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,ஜே.எம்.லாஹீர் முன்னால் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ்,முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் உட்பட முன்னால் மக்கள் பிரநிதிகள் கட்சியின் போராளிகள் என பலர் கலந்து கொண்டனர்.