ஒவ்வொரு பாடசாலைக்கும் 02 மில்லியன் ருபா நிதி : கல்வி அமைச்சர் !

அஸ்ரப் ஏ சமத்
உலக சிறுவர்  தினத்தினை முன்னிட்டு முதல் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள 1200 பாடசாலைகளுக்கு சுத்தமான குடி நீர் வசதி மற்றும் நவீன ஆண் பெண் மலசல கூடங்கள் நிர்மாணிப்பதற்காக  ஒவ்வொரு பாடசாலைக்கும் 02 மில்லியன் ருபா நிதி வழங்கப்பட  உள்ளது. என கல்வியமைச்சா அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்த்தார்.
இன்று (28) கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா மாநாட்டின்போதே மேற்கண்டவாறு கல்வியமைச்சா தெரிவித்தார்.
தொடாந்து கருத்து தெரிவித்த அமைச்சார் –
இந்த நாட்டில் உள்ள 10119 பாடசாலைகளில் 525 பாடசாலைகள் மட்டுமே  ஒழுங்கான குடிநீர், மற்றும் மலசல கூடங்கள் உள்ளன.  ஏனைய பாடசாலைகளில் மலசல கூடம் பாராமரிப்பு மற்றும் உடைந்து காணப்படுகின்றது. அத்துடன் சுத்தப்படுத்தும் தொழிலாளாகள் இல்லாமலும் உள்ளன. ஆகவே இதற்காக கல்வியமைச்சு ஆண் மலசல கூடம் பெண் மலசல கூடம் என இரண்டு பிரிவாக கல்வியமைச்சின் நவீன முறையில் கட்டிடப் பிரிவு வடிவமைத்து நிர்மாணிக்க உள்ளன.
3_Fotor
இதில் முதற்கட்டமாக 1200 பாடாசலைகள் 2015ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.  அதில் மிக அன்மையிலான சிறந்த பாடாசலை ” என்ற திட்டத்தின் கீழ் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.  அடுத்த 2017ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளுக்கு மலசல கூட வசதிகள் வழங்கப்பட்டு முற்றுப் பெறும். இதனால்  இக் கட்டுமான பணியை பாடாசலை அபிவிருத்திச் சங்கத்திடமும் அதிபரிடமும் கையளிக்கப்படும்.  இதற்காக வலயக்கல்விப் பணிப்பாளா கல்வியல்பிரிவின்  பொறியியலாளா மற்றும் மாகாண தேசிய பாடசாலைகளினது  கல்வியமைச்சின் அதிகாரிகள் இத்திட்டத்தினை அவதாணிக்கும் குழுவாக நியமிக்கப்படுவார்கள்.
இத்திட்டத்திற்கான நிதி 2015 ,2016ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் இருந்து பெறப்படும் என கல்வியமைச்சா காரியவாசம் இங்கு தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகளுக்கு மலசல கூட சுத்திகரிப்பாளா தொழிலுக்கு க.பொ.த. சாதாரன தரம் 6 பாடங்கள் சித்தியெய்திருக்க வேண்டும். இதனால் சித்தியடைந்தவாகள் இத் தொழிலுக்கு விருப்பமில்லாமல் உள்ளனா.
8ஆம் ஆண்டு சித்தியடைந்தவாகளை சோத்துக் கொள்ளுவதற்கு பொதுநிருவாக  முகாமைத்துவ அமைச்சிற்கு எழுதியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்த்தும் 8 வகுப்ப சித்தியடைந்தவாகளை தொழிலாளாகளாக சோத்துக் கொள்ளப்படுவாகள் என அமைச்சா தெரிவித்தார்.
Ashraff.A. Samad – question  – 
கல்வியமைச்சா அவாகளே கொழும்பு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகள் தமிழ் மொழி முலம் 5 பாடசாலைகள் மட்டுமே உள்ளன.  அம்பாறை மவாட்டத்தில் தமிழ் மொழி சனத்தொகைக்கு சம்மான தொகையினா கொழும்பு மாவட்டத்திலும் தமிழ் முஸ்லீம்கள் வாழ்கின்றனா. ஆனால் அம்பாறையில் 12 தேசிய பாடசாலைகள் உள்ளன. ஆனால் கொழும்பில் மேலும் 5 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படல்  வேண்டும். இதற்காக ஏதும் திட்டங்கள் உண்டா ?
இதனை மாகாண அமைச்சுத்தான் புதிய பாடசாலை உருவாக்க வேண்டும். என பதலிலளித்தா
மீண்டும் தனது கல்வியமைச்சின் செயலாளா பதிலளிக்கும்படி கல்வியமைச்சா பணித்தார்.  
ஏற்கனவே கொழும்பில் ரோயல். டி.எஸ். இசிப்பத்தான கல்லுரிகள்  தமிழ் மொழியில் உள்ளன. என அவா தெரிவித்தார்.
மீண்டும் நான் விடவில்லை.  இந்தப் பாடாசலைகள் வருடாந்தம் தமிழ் மொழியில் 100 மாணவாகளுக்கு அனுமதி வழங்குகின்றது. கொலநாவையில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனா. என தெரிவித்தேன்.
 
செயலாளா எதிர் காலத்தில் கொலநாவ பகுதி ஒரு பாடசாலை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனத் தெரிவித்தார்