இலங்கைக்கு முதன் முதலாக விசாலமான கொள்கலன் தாங் கிக் கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை முகத்தை வந்தடைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் “மார்கோ போலே” என்ற இக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக் கப்பலில் பெருந்தொகையான கொள்கலன்களை களஞ்சியப்படுத்த முடியும். பிரிட்டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் இக் கப்பல் 2012 ஆம் ஆண்டில் முதல் முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது.
இக் கப்பலின் உயரம் 29.9 மீற்றராகும். இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்த விசாலமான கொள்கலன் தாங்கிக் கப்பல் நுனiவா அயசளம கப்பலாகும். இக் கப்பலில் 15550 கொள்கலன்களை களஞ்சியப்படுத்த முடியும்.
இக்கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில்,
ஆசியாவில் கொள்கலன்களை கையாளும் கேந்திர நிலையமாக இலங்கை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும். அதற்காக கொழும்புத் துறைமுகத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
சீனா தொடக்கம் ஐரோப்பா வரையில் கடல் மார்க்கத்தின் பிரதான மத்திய நிலையம் கொழும்புத் துறைமுகமாகும். இதனால் எமது நாட்டின் அனைத்து துறைமுகங்களையும் கொள்கலன்களை கையாளும் துறை முகங்களாக மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன மீள் இறக்குமதியே இடம்பெறுகிறது. கடந்த காலங்களில் இங்கு பிரச்சினைகள் காணப்பட்டதால் முதலீட்டாளர்கள் இங்கு வரவில்லை.
ஆனால் இன்று அனைத்தும் மாறிவிட்டது. கடந்த 6 மாத அரைவாசிப் பகுதிக்குள் எமது துறைமுகம் அதிக பொருளாதார அபிவிருத்தியை கண்டுள்ளது.
இது நாம் பெற்ற வெற்றியாகும். அத்தோடு துறைமுகங்கள் மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும் ஆதாயத்தை பெற்றுக் கொள்ளும் விதத்தில் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.